42

னுசு லக்னம் வரையிலான 1 முதல் 12 பாவங்களைச் சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மகர லக்னப் பலன்களைக் காணலாம்.

மகர லக்னம்

Advertisment

மகர லக்னத்தில் பிறந்த வர்கள், தன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும், விரோதிகளானாலும் ஆதரித்து, ஆறு தல்கூறி உதவிசெய்யும் பண்பு கொண்டவர்கள். ஈகை குணம் கொண்டிருப்பார்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட் டாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந் தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். இவர்களுக்குப் பிடிவாத குணம் அதிக மிருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுகளால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். எந்தவொரு காரியத்திலும் இரண்டுவித ஆதாயங்களை எதிர்பார்ப் பார்கள். நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால், பேச்சில் தங்களுடைய சாமர்த் தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசும் சுபாவம் கொண்டவர்கள். நகைச்சுவை யாகப் பேசி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைப்பர். பழிச்சொல் சொல்பவர்களை நேரம் பார்த்துக் கலங்கடித்து விடுவார்கள். இவர்களுக்கு கள்ளங்கபடமற்ற, வெகுளித்தனமான குணமிருக்கும். மகர லக்னத்தில் பிறந்த வர்கள் எதையும் தைரியத் துடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றிருப்பார்கள். ஸ்திரமான புத்தி உடையவர்கள். விசாலமான கண்கள் உடையவர்கள். மற்றவர்களின்மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எப்பொழுதும் ஆடம்பரமில்லாமல் சாதாரணமாகத் தென்படுவார்கள். நடுத்தரமான உயரம் கொண்டவர்கள். தோற்றத்தில் சற்று அதிக வயதுடையவராகக் காட்சியளிப்பார்கள்.

ஆழ்ந்த யோசனையுடன், எதிலும் பரபரப்புடன் செயல்படுவார்கள்.

எவ்வித சோதனையையும் எளிதில் சகித்துக் கொள்வார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் செய்யவேண்டிய செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்கள். வெட்டிப்பேச்சு, வீண்பேச்சில் நாட்டமில்லாதவர்கள். தானுண்டு; தன் வேலையுண்டு என செயல்படும் குணம் கொண்டவர்கள். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றிபெற வேண்டுமென்ற வைராக்கியம் இருக்கும். வீண்செலவில் நாட்டமில்லா தவர்கள். சிவந்தநிறப் பெண்கள்மீது அன்புடையவர்கள்.

இவர்களுக்கு பத்து வயதில் ஜுரமும், 37 வயதில் கண்டமும் உண்டாகும். மகர லக்னத்திற்கு சனி லக்னா திபதி என்பதால், 5, 10-க்கு அதிபதியான சுக்கிரனும், 6, 9-க்கு அதிபதியான புதனும் மிகச்சிறந்த யோகக்காரர்கள். இவர்களுக்கு 3, 12-க்கு அதிபதியான குருவும், 8-ஆம் அதிபதி சூரியனும் மகாபாவி. ராகு கேந்திர, திரிகோணங்களில் அமைந்துவிட்டால் மிகவும் அனுகூலமான பலன்களை உண்டாக்குவார். லக்னாதிபதி சனியும், அட்டமாதிபதி சூரியனும் சிறப்பாக அமைந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

1-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரது தோற்றம், உடலமைப்பு, ஆயுள், ஆரோக் கியத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

மகர லக்னத்திற்கு அதிபதியான சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும்; கேந்திர (மேஷம் தவிர) திரிகோணங்களில் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றாலும்; சாரம் பெற்றாலும் நீண்ட ஆயுள், சிறப்பான உடலமைப்பு, வசதி வாய்ப்புகள் ஏற்படும். சனி சுபகிரகமான குரு சேர்க்கை பெறுவதும்; குரு பார்வை பெறுவதும் ஏற்றம்மிகுந்த பலனைத் தரும். சனி தனக்கு பகை கிரகமான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெறுவதும்; சூரியன், செவ்வாய் வீடான மேஷம், சிம்மம், விருச்சிகத்தில் இருப்பதும்- வக்ரம் பெறுவதும் நல்லதல்ல. சனி லக்னத்திற்கு 7-ஆம் வீடான கடகத்தில் அமைவதன்மூலம் திக்பலம் பெறுவதால் ஏற்றம்மிகுந்த பலனைத் தரும்.

சனி- சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால் வீண்வி ரோதம், தேவையற்ற பழக்கவழக்கங்கள், சமுதாயத்தில் அவப்பெயர் உண்டாகும். சனி- சூரியன், செவ்வாய், ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்று 8-ல் அமையப் பெற்றாலும்;

Advertisment

சந்திரனுக்கு 8-ல் அமையப்பெற்றாலும்; பலமிழந்து பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும் கடுமையான சோதனைகளை சந்திக்கநேரிடும். ஜென்ம லக்னத்தில் புதன், சுக்கிரன் அமைவது அனுகூலத்தை உண்டாக்கும்.

மகர லக்னம் என்பதால் 2, 7-க்கு அதிபதியான சனி, சந்திரன் மாரகாதிபதிகளாகும். இதனால் சனி, சந்திரன் தசாபுக்திக் காலங்களில் ஆரோக் கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

122

2-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக்கொண்டு தனம், வாக்கு, கண் பார்வை, குடும்பம், வசதிவாய்ப்பு போன்றவற்றைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

மகர லக்னத்திற்கு, லக்னாதிபதி சனியே 2-ஆம் அதிபதியுமாகும். சனியும், தனகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய குருவும் பலமாக அமையப்பெற்றால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும்; கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும்; தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றாலும்; சுக்கிரன், புதன் பலமாக அமையப்பெற்றாலும் தாராளமான தனவரவு, பணக்கஷ்டமில்லாத நிலையுண்டாகும்.

சனி- குரு சேர்க்கை பெற்று, இருவரும் பலம்பெற்றாலும்; சனி- குரு, சந்திரனுக்கு 2-ஆம் அதிபதி பலமாக அமையப் பெற்றாலும் பொருளாதாரரீதியான அனுகூலங்கள் உண்டாகும். சனி- சுக்கிரன், புதனுடன் இணைந்து பலம்பெற்றால் பூர்வீக சொத்துமூலமாகவும், பெண்களாலும் அனுகூலங்கள் அதிகரிக்கும். சனி- ராகுவின் சேர்க்கை பெற்று சுபர் பார்வை யின்றியிருந்தால், தவறானவழியில் சம்பா திக்கக்கூடிய நிலையுண்டாகும். குரு, சனி பலமிழந்து, இருவரும் பாவிகளுக்கிடையே அமையப்பெற்றாலும்; வக்ரம் பெற்றாலும் பொருளாதாரரீதியான இழப்புகள் உண்டாகும். சனி- சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் சேர்க்கை பெறுவதும்; சூரியன், செவ்வாய் வீடான மேஷம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளில் இருந்தாலும் பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

2-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவரது குடும்ப வாழ்க்கை பற்றி அறியலாம். 2-ஆம் அதிபதி சனி வலுப்பெற்று, குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று அமையப்பெற்றால் சிறப்பான குடும்ப வாழ்க்கை உண்டாகும். 2-ஆம் வீட்டை குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தோ, 2-ல் சுபகிரகங்கள் அமையப்பெற்றோ இருந்தால் குடும்ப வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும்.

2-ல் கிரகங்கள் இல்லாமலிருப்பது நல்லது. சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும்; 2-ஆம் வீட்டை பாவகிரகங்கள் பலமாகப் பார்வை செய்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. 2-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெற்று, அதன் தசாபுக்தி நடை பெற்றால் குடும்ப வாழ்வில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.

2-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவரது பேச்சுத்திறமை, வாக்குவலிமை பற்றி அறியலாம். 2-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுபகிரகங்கள் அமையப்பெற்றாலும்; 2-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் சிறப்பான பேச்சாற்றல் உண்டாகும். 2-ஆம் அதிபதி சனி லக்னாதிபதி என்றாலும், 2-ல் சனி அமையப்பெற்றால் நாவடக்கி செயல்படுவது நல்லது. 2-ல் செவ்வாய், ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றால் முரட்டுத்தனமான பேச்சு, பேச்சால் மற்றவர்களைப் புண்பட வைக்கும் நிலை உண்டாகும். 2-ல் பாவகிரகங்கள் இருந்தால் பேச்சில் நாணயம் இருக்காது.

2-ஆம் வீடு வலது கண்ணைக் குறிக்கும் ஸ்தானம். சனி பலம்பெற்று அமையப் பெற்றாலும்; நட்பு வீட்டில் அமையப் பெற்றாலும்; சுபகிரகப் பார்வை பெற்றாலும் கண் பார்வை நன்றாக இருக்கும்.

கண்களுக்குக் காரகன் சூரியன், சுக்கிரன், 2-ஆம் அதிபதி சனி ஆகியோர் பலமிழப்பது நல்லதல்ல. சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப் பெற்றாலும்; 2-ல் செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும்; சூரியன், சுக்கிரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்றாலும் கண்களில் பாதிப்பு ஏற்படும். சனி பாவிகள் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் இருந்தால் கண்களில் நீர் சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001